தமிழ் மரபுக்கல்வி
உலகில் பல நாடுகளில் தமிழ் இருக்கைகள் அமைந்துகொண்டுள்ளன. இருப்பினும் அந்த இருக்கைகளுக்கு தேவையான தரமான தமிழ் ஆராய்ச்சி மாணவர்களை அந்தந்த நாடுகள் உருவாக்குகின்றனவா என தெரியவில்லை. தமிழ் இருக்கைகள் மிக மிக தேவையான ஒன்று, இருப்பினும் அதற்கு தகுதியுள்ள மாணவர்களை எதிர்காலத்தில் அனுப்பிவைப்பதில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் பள்ளிகள் முதன்மைபெறவேண்டும் என்பதே எமது வேண்டுகோள். அதற்குண்டான வரைமுறை திட்டத்தை எத்துணை பள்ளிகள் வைத்துள்ளன என்று தெரியவில்லை.இருப்பினும் எமது திட்டத்தின் படி கீழ்கண்ட பாட நிலைகள் இருக்கவேண்டும்.இந்த பாட திட்டங்கள் இப்போது இல்லாவிட்டாலும்,நாம் அனைவரும் இணைந்து பணியாற்றினால் இதற்குண்டான பாடத்திட்டத்தை வகுக்கலாம். இணைந்து பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் தங்களின் விருப்பத்தை தெரிவிக்கலாம். (info@marabukalvi.com)
பத்து வயதிற்குள் நமது தமிழ் பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியவைகள்:
தமிழ் வரலாறு
தமிழர் வரலாறு
தமிழ் மொழி
எண்ணியல்
எழுத்தியல்
அடிப்படை இலக்கணம்
அடிப்படை புவியியல்
அடிப்படை வாழ்வியல்
பத்திலிருந்து பதினேழு வயதிற்குள்
தமிழ் சிற்றரசர்கள் வரலாறு
தமிழ் பேரரசர்கள் வரலாறு
தமிழர்களின் உணவு, உடை மற்றும் மொழியின் தொன்மை
தமிழுக்கும் மற்ற மொழிகளுக்கும் உள்ள வேறுபாடுகளும். மற்ற மொழிகள் தமிழிருந்து பெற்றவையும்.
தமிழ் அறிவியல் , உதாரணம் குடபுலவியனார் தன் அரசன் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு *நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருக* என்னும் புறநானூற்று பாடலை சுட்டி கட்டுதல் போன்ற பல சான்றுகளுடன் பாடங்களை அமைத்தல்.
தமிழ் கணிதம் (கணியன் பூங்குன்றனாரின் கணக்கதிகாரத்தின் அறிமுகம்)
தமிழ் வாணிபம்
தமிழ் நீதி நிர்வாகம் (மனு நீதி சோழன்)
தமிழ் நிதி நிர்வாகம் (அஞ்சறைப்பெட்டி முறை)
தமிழ் வைத்தியம் ( வர்ம வைத்தியம்)
தமிழ் சித்தர்களின் யோக மற்றும் ஞான கலைகள்
தமிழ் இறையியல்
சித்த மருத்துவம் (ஆயிக்கணக்கான முறைகள்)
மூலிகை மருத்துவம் (தாவரவியல்)
சிலம்பம், குத்துவரிசை, குறுந்தடிமற்றும் சிரமக்கலை போன்ற போர்முறைகள் மற்றும் தற்காப்பு கலைகள்.
பொறிவினை அதாவது இயந்திரங்கள் (MACHINERY AND ROBOTICS) தமிழ் முறைக்கும் இன்றைக்கும் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் பற்றிய ஆய்வுகள் சிறிய ளவில் நடத்தப்படவேண்டும்.
தமிழ் சோதிடவியல் (சினேந்திரமாலை மற்றும் பல்வேறு சித்தர்களின் எண்ணிலங்கா நூல்கள்)
தமிழ் வானவியல்
தமிழ் இசை ( உலகிலேயே தமிழ் மொழியில் மட்டுமே பல்லாயிரக்கணக்கான சந்தங்கள் உள்ளன. தமிழில் ஆயிரமாயிரம் சந்தங்கள் உள்ளன. திருப்புகழில் மட்டுமே 362 சந்தங்கள் உள்ளதாகத் தெரிகின்றது. சந்தத்தை, தொல்காப்பியம் வண்ணம் என்று குறிப்பிடுகின்றது.)
தமிழ் விவசாயம்
தமிழ் கலவியல் (பெரும்பாலான கலித்தொகை பாடல்கள்)
தமிழ் கூத்து (நாடகம்)
தமிழ் உயிர்கொள்கை (இறையனார் அகப்பொருள், திருமந்திரம், திருக்குறள், தேவாரம், திருவாசகம்-அண்டப்பத்து மற்றும் பல)
இன்னும் எத்துணையோ துறைகள் உள்ளன. இவற்றை உள்ளடக்கியதாக நமது பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும் எமது விருப்பம். இதில் தாங்களும் பங்கெடுக்க விரும்பினால், விருப்பமுள்ளவர்கள் எம்மை info@marabukalvi.com என்னும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி வணக்கம்.
சித்தயோகி இராஜாபாபு