சிரமக்கலை [குறுதடி சிலம்பம்]
இது ஆதி தமிழர்களின் போர்க்கலை. நம் முன்னோர்களாகிய மாவீரர்கள் மன்னர் ஆட்சி காலங்களில் போரில் எதிரிகளை துவசம் செய்த கலைதான் சிரமக்கலை. சிரமக்கலையின் அடிப்படை பயிற்ச்சி குறுதடி சிலம்பம். குறுதடி சிலம்பம் என்பது போரில் பயன்படுத்தப்படும் வாள் அளவிலான குறுந்தடியில் பயிற்சி செய்யக்கூடிய ஓர் போர்க்கலையாகும். வேறெந்த தற்காப்பு கலைகளிலும் இல்லாத அளவிற்கு வர்ம தாக்குதல் மற்றும் தடை முறைகள் இந்த குறுதடி சிலம்பத்தில் இருக்கிறது.
இந்த குறுதடி சிலம்ப பயிற்சியில் உச்சி முதல் பாதம் வரையிலான அனைத்து பகுதிகளிலுமுள்ள வர்ம பகுதிகளை தாக்குவதும் தடுப்பதுமான அடவுமுறைகளும், கை மற்றும் காலால் தாக்கி தடுக்கும் முறைகளும் இருக்கிறது. இந்த பயிற்சிகள் உடல் வலிமையும் மனவலிமை மற்றும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது.
போமப்பா போர்க்களத்தில் போர்தான் செய்யும்
புண்ணியனே துஷ்டர்களை ஒடுக்கும் கம்பு
ஆமப்பா பட்டவரை எழும்பச் செய்யும்
ஆமென்ற பஞ்சபூதம் அதிலே ஆகும்
அழகான கம்புமுறை இது தப்பாது - குறுதடி சிலம்ப சாத்திரம்
குறுதடி சிலம்பத்தைக்கொண்டு போர்க்களத்தில் போர்செய்ய பயன்படுத்தலாம். சமூக விரோத செயல்களில் ஈடுபடும் துஷ்டர்களை ஒடுக்க பயன்படும். இந்த குறுதடி சிலம்பம் முறையாக பயிற்சி பெற்றவர்களால் அடி இடி வர்ம காயம் கொண்டவர்களை எழும்பச் செய்ய முடியும்.
இன்றைய இராணுவ பயிற்சி எவ்வளவு கடுமையான இருக்கும் என்பது நம்மில் அனேகருக்கு தெரிந்த ஒன்றுதான். எதிரியை தூரத்தில் இருந்து தாக்குவதற்கே இவ்வளவு பயிற்சி என்றால் எதிரியை நேருக்கு நேர் எதிர் நின்று வீழ்த்தவேண்டுமானால் நம் முன்னோர்களாகிய மாவீரர்கள் எவ்வளவு பயிற்சி செய்திருப்பார்கள். எதிரியை போரில் நேருக்கு நேர் நின்று வீழ்த்த வேண்டுமானால் இலக்கை துல்லியமாக தாக்கும் பயிற்சியும் எதிரியை விட வேகமும் இருந்தால் மட்டுமே எதிரிகளை வீழ்த்த முடியும்.
இந்த குறுதடி சிலம்பத்தில் போரில் எதிரிகளை துவசம் செய்யும் அனைத்து நுட்பங்களும் அடங்கியிருக்கிறது. இந்த போர்க்கலையை ஆண்கள் மற்றும் பெண்கள், வயதில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்களும் கற்றுக்கொள்ளலாம். இந்த கலையைக் கற்றுக்கொள்ள வயது மற்றும் பாலினம் ஒரு பொருட்டல்ல.
இது தமிழர்களின் பாரம்பரிய கலை அறிவியல் மற்றும் பண்பாடு முதலியவற்றை உள்ளடக்கியது இந்தக் கலை குருகுலமுறையில் குருமுகமாய் மட்டுமே கற்றுக் கொடுக்கப்படும்.
இந்த கலையைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் info@marabukalvi.com என்னும் மின்னஞ்சல் மூலமாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி,
- குமரி பிவின்,