வணக்கம்,
இறைப்பேராற்றலின் அருட்கருணையினாலும், குருமண்டலத்தின் பேரன்பாலும் மரபுக்கல்வி கலைக்கூடம் என்னும் இந்த தமிழ் மரபு கற்றல் பயிற்சிக்கூடம் சித்தயோகி இராஜாபாபு அவர்களின் தவ உணர்வில் உதித்து செயல்பாட்டிற்கு வந்துள்ளது. சித்தயோகி இராஜாபாபு அவர்கள் உருவாய் அருவாய் வாழ்ந்துகொண்டிருக்கும் பல சித்தர்களால் ஆசியும் சித்தர்களின் வாசி யோகம், லம்பிய யோகம், வர்மம், சிலம்பம், நாடி அறிதல், சித்த வைத்தியம் போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மரபு கற்றல் பயிற்சிக்கூடம் மூலம், தமிழ் மரபு உலகம் முழுவதும் பரவி மனிதகுலத்திற்கு நன்மையுண்டாக்கும் என்பது இறையருளின் விருப்பம். இந்த சித்தர்களின் தமிழின் மூலம் உலக சமுதாயத்திற்கு வாழ்வியல், உணவியல், தற்காப்பு கலைகள், உளவியல், பொருளியல், கல்வியியல், குடும்ப உறவுகள், தமிழின் தொண்மை, தமிழின் பெருமை போன்ற கருவூலங்களை தமிழர்களுக்கும், உலக சமுதாய நன்மைக்கும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதனை செயல்படுத்த உதவிசெய்யும் அனைத்து சிவகணங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி வணக்கம்
மரபுக்கல்வி கலைக்கூடம்®
Vanakkam,
With the blessings of the supreme divine and Gurus, SiddhaYogi Rajababu has been blessed with so many Siddhas who are living in Physical and Astral body. The Marabu Kalvi Kalai Koodam® was initiated by the supreme divine on his meditation. Through this Academy, we are aimed to help and create awareness of the Tamil Traditional Arts, which will be helping the humankind across the globe for Food/Farming, Psychology, Prosperity, Education, Family Relations, Tamil Heritage, and Tamil Pride. We thank each and every creatures of the supreme divine who are all helping us to achieve these great noble activities.
Thank you
Marabu Kalvi Kalai Koodam®