குழந்தைகளுக்கான பாடத்திட்டம்
உலகில் பல நாடுகளில் தமிழ் இருக்கைகள் அமைந்துகொண்டுள்ளன. இருப்பினும் அந்த தமிழ் இருக்கைகளுக்கு தேவையான தரமான தமிழ் ஆராய்ச்சி மாணவர்களை அந்தந்த நாடுகள் உருவாக்குகின்றனவா என தெரியவில்லை. தமிழ் இருக்கைகள் மிக மிக தேவையான ஒன்று, இருப்பினும் அதற்கு தகுதியுள்ள மாணவர்களை எதிர்காலத்தில் அனுப்பிவைப்பதில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் தங்களின் அடுத்த தலைமுறை குழந்தைகளை தமிழ் ஆய்வு செய்யும் தரத்துடன் உருவாக்குவது என்பது மரபுக்கல்வி கலைக்கூடத்தின் தலையாய பணிகளுள் ஓன்று. இதனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதே கீழ்கண்ட பாடத்திட்டம்.
பாடத்திட்டம் தொடர்
1. மழலைத் தொடர் ( எழுத்து அல்லது படித்தல் நீங்கலாக, இந்த தொடரில் முழுக்க முழுக்க பேசும் திறனையும் பாடும் திறனையும், வரலாற்றையும் அறிதல் .)
வயது:: ஐந்து முதல் ஏழு வரை (அல்லது தமிழில் எதுவுமே அறியாதிருப்பவருக்கு)
ஒளவையின் ஆத்திசூடி நூற்றியெட்டு
ஒளவையின் கல்வியில் ஒழுக்கம் எண்பத்தாறு (அறிமுகம்)
2. சுற்றமறிதல் தொடர் (தமிழ் எழுத்துகள், எண்கள் அறிமுகம்)
வயது: ஏழு முதல் ஒன்பது வரை
வீடும் தமிழ் உறவு முறைகளும்
ஒளவையின் கல்வியில் ஒழுக்கம் எண்பத்தாறு (தொடர்தல்)
ஒலி
ஓசை
உயிர் எழுத்து
மெய் எழுத்து
அலகு
மாத்திரை
நெடில்
குறில்
ஒற்று
இரண்டெழுத்து
மூன்றெழுத்து
எண்ணியல் தொடக்கம்
தமிழரசர்களின் வரலாற்று உண்மைகள்
3. அறிதல் தொடர் ( எழுத்தியல், எண்ணியல், தமிழர் வாழ்வியல் அறிதல்)
வயது : ஒன்பது முதல் பத்து வரை
உயிர் மெய் எழுத்து
சொற்கள் அறிதல்
வாக்கியங்கள் உருவாக்குதல்
தமிழ் வரலாறு
தமிழர் வரலாறு
எண்ணியல் வாய்ப்பாடு
அடிப்படை இலக்கணம்
அடிப்படை புவியியல்
அடிப்படை வாழ்வியல்
தற்காப்பு கலைகள் அறிமுகம் (சிலம்பம், குத்துவரிசை, குறுந்தடிமற்றும் சிரமக்கலை போன்ற போர்முறைகள் மற்றும் தற்காப்பு கலைகள்) - செயல்முறை பாடங்கள் தனியாக நடத்தப்படும்.
4. தெரிதல் தொடர் ( தமிழர் அறிவியல், கணக்கதிகாரம்)
வயது: பதினொன்று முதல் பதின் மூன்று வரை
தமிழ் சிற்றரசர்கள் வரலாறு
தமிழ் பேரரசர்கள் வரலாறு
தமிழர்களின் உணவு, உடை மற்றும் மொழியின் தொன்மை
தமிழுக்கும் மற்ற மொழிகளுக்கும் உள்ள வேறுபாடுகளும். மற்ற மொழிகள் தமிழிருந்து பெற்றவையும்.
தமிழர் அறிவியல்
கணக்கதிகாரம் ஒரு அறிமுகம்
5. புரிதல் தொடர் (உலகியல் அறிமுகம்)
வயது : பதிமூன்று முதல் பத்திநான்குவரை
தமிழ் விவசாயம்
தமிழ் உயிர்கொள்கை
தமிழ் கூத்து (நாடகம்)
தமிழர் நிதி நிர்வாகம் (அஞ்சறைப்பெட்டி முறை)
தமிழ் வைத்தியம் மற்றும் சித்த மருத்துவம்
6. விளங்கள் தொடர் ( தமிழ் மேல்நிலை விளக்கங்கள்)
வயது : பதினான்கு முதல் பதினாறு வரை
மூலிகை மருத்துவம் (தாவரவியல்)
தமிழ் சோதிடவியல் (சினேந்திரமாலை மற்றும் பல்வேறு சித்தர்களின் எண்ணிலங்கா நூல்கள் அறிமுகம்)
தமிழ் இசை அறிமுகம் ( உலகிலேயே தமிழ் மொழியில் மட்டுமே பல்லாயிரக்கணக்கான சந்தங்கள் உள்ளன. தமிழில் ஆயிரமாயிரம் சந்தங்கள் உள்ளன. திருப்புகழில் மட்டுமே 362 சந்தங்கள் உள்ளதாகத் தெரிகின்றது. சந்தத்தை, தொல்காப்பியம் வண்ணம் என்று குறிப்பிடுகின்றது.)
தமிழ் உயிர்கொள்கை அறிமுகம் (இறையனார் அகப்பொருள், சிவவாக்கியம், திருமந்திரம், திருக்குறள், தேவாரம், திருவாசகம்-அண்டப்பத்து மற்றும் பல)
தமிழ் கலவியல் (அறிமுகம்)
செய்யுள் இலக்கணம் அறிமுகம்
7. தமிழ் ஆய்வன் (மாணவர்களின் ஆய்வுகள்)
வயது: பதினாறு முதல் பதினெட்டுவரை
ஓலை சுவடி வாசிக்க கற்றல்
கல்வெட்டு எழுத்து வாசிக்க கற்றல்
வட்டெழுத்து வாசிக்க கற்றல்
செய்யுள் இலக்கணம் ஆய்வுகள்
பொறிவினை அதாவது இயந்திரங்கள் பற்றிய தமிழ் இலக்கியங்களில் ஆய்வுகள்